Sengulam Webseries Review
சம கால அரசியலை நம் கண் முன் கொண்டு வந்துள்ளார்.
விருதுநகர் நகரத்தின் உள்ளாட்சி அரசியலை தன் கைக்குள் வைத்துக் கொண்டு தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக நகராட்சி தலைவர் பதவியை வகித்து வருகிறது ஒரு குடும்பம். இரண்டாவது திருமணம் செய்த சில மாதங்களில் சேர்மன் இறந்து விட, யாரை விருதுநகரின் சேர்மன் ஆக்குவது என்று முடிவெடுக்க முடியாமல் திணருகிறார் குடும்பப் பெரியவர் சிவஞானம். ஒரு வழியாக தனது இன்னொரு மகனை முன்னிறுத்தலாம் என்று எண்ணும் போது இறந்த சேர்மனின் மனைவியும், வீட்டின் மருமகளுமான சூரியகலா தனது தோழி நாச்சியாருடன் இணைந்து சில தந்திரங்கள் செய்து தேர்தலில் வெற்றி பெற்று விருதுநகரின் நகராட்சி தலைவர் ஆகிறார். ஒரு சில வருடங்களில் குண்டு வீச்சில் சூர்யகலா கொல்லப்பட்டு விட, தோழி நாச்சியார் கவுன்சிலர்களை வளைத்துப் போட்டு நகராட்சி தலைவர் ஆகிறார். சூர்யாகலாவின் கொலையின் பின்னணியில் இருப்பது தனது தங்கை நாச்சியார்தான் என்பதை கண்டு பிடிக்கிறார் அண்ணன் ராயர். தொடரின் முடிவு நாம் எதிர் பார்க்காத வகையில் உள்ளது.
முதல் பாதி மெதுவாகவும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்றுள்ளது
அனைவரும் நடிப்பும் எதார்த்தமாக உள்ளது நன்றாக உள்ளது. திரில்லர், அரசியல்,துரோகம் அனைத்து விதமான விஷயங்கள் உள்ளது.
Add Comment