Movie Review Entertainment Movies Tamil Movie Review

Pathu Thalla Movie Review in Tamil 2023 Best Movies

Pathu Thalla Movie Review in Tamil 2023
Pathu Thalla Movie Review in Tamil 2023
இது முற்றிலும் மாறுபட்ட கதை கதையில் இரண்டு நாயகர்கள் வலம் வருகிறார்கள்.

பத்து தல படத்தின் கதை.


ஒரு இரகசிய போலீஸ்காரர். கன்னியாகுமரி போகிறார். அந்த ஊரில் உள்ளவர்கள் ஒரு டான்க்கு பயந்து வாழ்ந்து வருகிறார்கள். தனது இரத்தம் மற்றும் காயத்தால் டானிடம் தனது தகுதியை நிரூபித்தவுடன் இறுதியாக அவரைச் சந்திக்கிறார். அவர் டானைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதும், அவருடைய செயல்பாட்டின் முறையும் இந்தக் கதையின் மீதியை உருவாக்குகிறது.

பத்து தல படத்தின் ரிவிவ் – Pathu Thalla Movie Review

இது முற்றிலும் மாறுபட்ட கதை கதையில் இரண்டு நாயகர்கள் வலம் வருகிறார்கள்.
முதலில் கவுதம் கார்த்திக் இரகசிய போலிஸ் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தனக்கு சரினு படுவதை செய்பவன். நிழல் உலக தாதாவான சிம்பு டி.ஆர்.ஐ (AG இராவணன்) பற்றி அறிந்து அவரை கைது செய்து ஜெயிலில் அடைப்பதை நோக்கமாக கொள்கிறார். அதற்கான முயற்சியில் பயணம் செய்து கொண்டே இருக்கும் போது தாதாவான சிம்பு டி ஆர் ( AG இராவணன்) குரூப் ல இணைந்து வேலை செய்து கொண்டே இருக்கும் பட்சத்தில் சிம்பு வின் உயிருக்கு ஆபத்து வருகிறது.

அவரை காப்பாற்றி அவரின் பாசமான காவலாளியாக மாறி அவர் பக்கத்தில் AG இராவணன் கோட்டை வீட்டிலேயே தங்கி அவரை பற்றி எல்லா தகவல்களையும் சேகரித்து கொண்டிருக்கும் நேரத்தில் (AG இராவணன்) நல்லது தான் ஊர் மக்களுக்கு செய்கிறார் என்று உணர்ந்து கொள்கிறான்.சிம்பு வசனங்கள் அருமை நல்லது செய்ய கூட கெட்டவன் என்ற முகம் தேவை படுகிறது. என்னோட ஊருல மண்ணை எடுக்கறது என்னோட தாயோட மார்பை அறுக்கிறதுக்கு சமம் நான் இந்த மண்ணை நோன்டி எடுக்கலனான யாருமே இதை பண்ண மாட்டாங்க னு உறுதி கொடுங்க நானும் இந்த தவறை பண்ணமாட்டேன் என்று சொல்கிறார். மணல் கொள்ளையை வைத்து தான் இங்கே எல்லாரும் அரசியல்

பண்றாங்க னு சொல்வது தனது தங்கையின் கணவன் தெற்கு ஆப்பிரிக்காவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்திய மக்களின் மேல் உபயோகிக்க போட்ட திட்டம் தெரிந்து அவரை கொலை செய்கிறார்.

சிம்புவின் தங்கை இதை போனில் கேட்டு அன்று முதல் அவரிடம் பேசுவதை விட்டு விட இவர்கள் இடையில் உள்ள நீண்ட கால பிரச்சினையை கவுதம் கார்த்திக் தீர்த்து வைத்து இருவரையும் சேர்த்து வைக்கும் காட்சிகள் படத்தின் பலம். சிம்பு டி ஆர் கெட்டவன் என்று எண்ணி அவரை கைது செய்ய வரும் கவுதம் கார்த்திக் சிம்பு டி ஆர்காக தனது போலீஸ் வேலையை இராஜினாமா செய்யும் அளவுக்கு சிம்பு மீது பாசம் வைக்கிறார்‌. சிம்புவுக்கு எதிராக இருந்த எல்லா ஆதாரங்களையும் மறைத்து சிம்புவை காப்பாற்றுகிறார்.

அதிகமாக காட்சி பிழைகள் உள்ளன.பிரியா பவானி சங்கர் படத்துல எதுக்கு நடிந்தாங்கனு தெரியல சிம்புவின் தங்கையாக நடித்த அனு சித்தாரா நடிப்பு சரியில்லை. படத்துல காமெடிகாக கிங்ஸ் வெஸ்லி நடித்துள்ளார். அவருக்கு காமெடி பண்ண வரல ஒரு சீன்ல இரயில துப்பாக்கி காட்டி நிறுத்திட்டு லாரிகள் அனுப்புறாரு அந்த இடத்தில கோவம் வரமாதிரி காமெடி பண்ணியிருக்காரு.2017ஆண்டில் வெளிவந்த MUFTI கன்னட படத்தின் கதை Copyright வாங்கி பண்ணியிருக்காரு இயக்குனர் அந்த படத்தை அப்படியே எடுத்து இருந்தா படம் பார்க்கிற மாதிரி இருந்து இருக்கும் கடைசி ல துப்பாக்கி ல வச்சி எதுக்கு சண்டை போட்டாங்கனே தெரியல சிம்புகாக ஒரு தடவை படம் பார்க்கலாம்.

படத்தின் பாடல்கள் இசை மற்றும் சண்டை காட்சிகள் அனைத்தும் அற்புதம் நிறைய இடங்களில் கருப்பு வெள்ளை காட்சிகளுக்கு பதில் சாம்பல் நிற காட்சிகள் அதிகம் அனைவரும் திரை அரங்குகளில் வந்து பார்க்க கூடிய படம் இயக்குனர் மட்டும் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

இந்த பத்து தல படத்தக்கு என்னோட ரேட்டிங் 3/5.

இவன் ரா.பூபாலன்.

Pathu Thala Movie Trailer

Pathu Thala Movie Trailer

Pathu Thalla Movie Review
  • Director
  • Music
  • Cinematography
  • Actor Performance
  • Story
3.6

Pathu Thalla Movie Review in Tamil 2023

Pathu Thalla Movie Review in Tamil 2023: இது முற்றிலும் மாறுபட்ட கதை கதையில் இரண்டு நாயகர்கள் வலம் வருகிறார்கள்.

About the author

Avatar of Bhoopalan Shanthosh

Bhoopalan Shanthosh

As a director/actor in Tamil film, Bhoopalan Raman gained experience in the industry.

The motto he lives by is "Hard work leads to success."

Add Comment

Click here to post a comment