Iceman -2012
OTT. Netflix
நிறைவான குடும்பம் வளமான பொருளாதாரம் மகிழ்வான வாழ்வு .. பல ஆண்கள் ஏற்படுத்தி தரும் வாழ்க்கையின் பிரதிபலிப்பு இதுவாக இருக்கையில் அந்த குடும்ப தலைமகனின் மறுமுகத்தையோ ,எவ்வாறு வருவாய் ஈட்டுகிறார் அவரது தொழில் சம்பந்தமான விடயங்களையோ மனைவி , குழந்தைகள் மற்றும் நெருங்கிய நண்பர்களோ அறிந்து இருக்க மாட்டார்கள்.
சமுதாயமும், குடும்பமும் கனவானாக மதிக்கும் ஒரு சிலரின் நிஜமுகம் வேறானது. ஒரு இருண்ட, வன்முறை பக்கத்தைக் கூட கொண்டிருக்கிறார்கள்.
Richard Kuklinski அவரது தொழில் பணத்துக்கு கொலை செய்வது.
அவரது மனைவியோ அல்லது அவரது மகள்களோ நண்பர்களோ அவரை ஒரு கொலையாளி என்று ஒரு கணமும் சந்தேகிக்கவில்லை.
குக்லின்ஸ்கி தனது 22 வருட வாழ்க்கையில் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் லாபத்திற்காகவும் 100 கொலைகளை செய்துள்ளார்.
அவரது வாழ்கையின் உண்மையை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் Iceman.
பணத்துக்காக கொலைகள் செய்பவர்களுக்கும் தங்கள் தொழிலில் காட்டும் நேர்த்தியும் , திட்டமிடல் சரியான முடிவுகள் கூடவே அவர்களுக்கு என சில அடிப்படை கோட்பாடுகள், இருக்கத்தான் செய்கிறது என்பதை படம் சொல்கிறது.
மைக்கேல் ஷானன், வினோனா ரைடர், ரே லியோட்டா போன்ற திறமைமிகு நடிகர்களும்,சிறந்த தொழில்நுட்பம், பரபரப்பை தரும் திரைக்கதையும் , படத்துடன் ஒன்றிவிடச் செய்கிறது.
சுவாரஸ்யமான அனுபவத்தை தரும் இத்திரைப்படம் வயது வந்த பார்வையாளருக்குரியது.
Add Comment