Entertainment Movies

Kannai Nambathey Tamil Movie Reviews

Kannai Nambathey
Kannai Nambathey
'இரவுக்கு ஆயிரம் கண்கள்,'திரைப்படத்திற்குப் பிறகு மு.மாறன் இயக்கத்தில் வந்திருக்கும் திரைப்படம்.

‘கூடா நட்பு கேடாய் முடியும்!’

‘கண்ணை நம்பாதே!’

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்,’திரைப்படத்திற்குப் பிறகு மு.மாறன் இயக்கத்தில் வந்திருக்கும் திரைப்படம்.

படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து இறுதி வரையில் சிறிதும் யூகிக்க முடியாத வகையில் மிக சரியாகவே திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர்.

உதயா, பிரசன்னா Room mate-ஆக தங்கும் சூழல்.அவர் பெரிய குற்றம் ஒன்று செய்ய, அது இவர் செய்திருக்கிறார் என்கிற வகையில் அமைந்து விடும்.பிரசன்னா,தான் செய்த குற்றத்தை மறைக்கும் விதமாக உதயாவிற்கு ஆலோசனையை தொடர்ந்து சொல்கிறார்.அவருடைய கேரக்டர் தெரியாமல் அவர் சொல்றபடியே கேட்டு நடக்கிறார்,உதயநிதி.
அது,தொடர் கொலைகளாக Pre-climax வரை வளரும்.

எப்பொழுதுமே,Character-க்கு மட்டும் Suspence வைத்து விட்டு Audience-க்கு தெரிந்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.Character-Audience-என இரண்டு பேருக்குமே இறுதி வரையில் Suspence வைத்து சென்றாலும் நன்றாகத்தான் இருக்கும்.

அதே கண்கள்,புதியபறவை போன்ற படங்கள் இந்த வகையை சார்ந்தது.

ராட்சசன் திரைப்படத்தில் Audience-க்கு தெரியும்.கேரக்டருக்கு தெரியாது.கதைக்கு தேவையின்றி திணித்தால்தான் திரைக்கதையில் பிரச்னையாகும்.

இந்தப் படத்தின் மூன்றாவது காட்சியிலேயே பிரசன்னா ஒரு மோசமான கேரக்டர் என அறிமுகப்படுத்தி விடுகிறார் இயக்குநர்.அவருடன் ஒரு நல்ல கேரக்டரை பயணிக்க வைத்து நமை சுவாரஸ்யப்படுத்தி விடுகிறார்,இயக்குநர்.

இயக்குநர் தொடர்ந்து முடிச்சுப் போட்டு கொண்டே வருவதைப் பார்க்கும் பொழுது,இவர் எப்படி இத்தனை முடிச்சுகளை அவிழ்க்கப்போகிறார் என ஆர்வமாகத்தான் படத்தைப் பார்க்கிறோம்.ஆனால்,ஏமாற்றவில்லை.

நாலைந்து படத்தின் கதைகளை ஒரே படத்தில் வைத்தது போன்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது.ஆனால்,திரைக்கதையில் எவ்வித குழப்பமில்லாமல் இயக்கியிருக்கிறார்,இயக்குநர்.

ஒரே சரணத்தில் பாடலை முடித்ததும்,நகைச்சுவை காட்சிகளை திணிக்காமல் இருந்ததும் பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள்.

இரவு நேரக்காட்சிகளை அருமையாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குநர்.பின்னணி இசை மேலும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

ரோஜாக்கூட்டம் படத்தின் ஜோடி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்திருக்கு.எனக்குப் பிடித்த பூமிகா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Crime thriller movie என்பதால் கதையை சில வரிகளில் மட்டுமே சொல்லியுள்ளேன்.

இயக்குநர் மு.மாறன் அவர்களுக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

ரா.பூபாலன்.

About the author

Avatar of Bhoopalan Shanthosh

Bhoopalan Shanthosh

As a director/actor in Tamil film, Bhoopalan Raman gained experience in the industry.

The motto he lives by is "Hard work leads to success."

Add Comment

Click here to post a comment