Entertainment Malayalam Movie Review Movie Review Movies

Iratta Malayalam Movie Review in Tamil | Best Malayalam movie in 2023

Iratta Malayalam Movie Review in Tamil
Iratta Malayalam Movie Review in Tamil
In the story, Pramod and Vinod are twin cop brothers (Iratta in Malayalam), as well as their friends and relatives.

Iratta Malayalam Movie Review in Tamil: இன்பம், சிரிப்பு,கருணை,கோபம், வீரம், அச்சம்,அருவருப்பு,அற்புதம், சாந்தம் ஆகிய ஒன்பது நவரசங்களில், சில பல தசாப்தங்களுக்கு வெறும் நான்கைந்து நவரசங்களை மட்டுமே நம்மை உணர செய்து… அதிலேயே மாபெரும் களிப்பூட்டிய பெருமை நம் தமிழ் சினிமாவுக்கு உண்டு. இன்பத்துக்கு இளையராஜாவும், சிரிப்புக்கு கவுண்டமணி செந்திலும், வீரத்திற்கு சூப்பர் ஸ்டாரும், விஜயகாந்த்துமே நம் ரசனை பசிக்கு போதுமானவர்களாய் இருந்தார்கள்.

“பொத்தி பொத்தி வளர்த்த புள்ள மேகல… அதனால அதுக்கு வெக்கம் விட்டு போகல ” என்பது போல ரொம்பவும் சர்ச்சைக்குரிய சம்பவங்களை அவ்வளவாய் ஏறிட்டு பார்க்காத குணம் தமிழ் சினிமாவினுடையது. ஆனால் சேட்டன்கள்? எப்போது தென் கொரிய சினிமாவோடு அவர்கள் அங்காளி பங்காளியாய் பின்னி பிணைய ஆரம்பித்தார்களோ, அப்போதிருந்து கிட்டத்தட்ட எல்லா நவரசங்களையும் ஒரு கை பார்த்துவிடுவோம் என இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

கதா நாயகர்கள் இரட்டையர்கள். வெயிட் வெயிட்… மிச்ச கதையே நான் சொல்றேன்… சின்ன வயசுலயே ரெண்டு பேரும் பிரிஞ்சுடுவாங்க… அதுல ஒருத்தன் நல்லவன்… இன்னொருத்தன் கெட்டவன்… கிளைமாக்சில் கெட்டவன் திருந்தி… ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துடுவாங்க… “இரட்டை குழந்தைகள் பிறந்து விட்டால் திரைக்கதையில் இதை தவிர வேறு என்னதான் செய்ய முடியும்” என எண்ணிகொண்டிருந்த கூட்டத்திற்குள், மகிழ்திருமேனி , “தடம்” என்னும் அட்டகாசமான ஒரு கிரைம் திரில்லர் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். ஆனால் “இரட்டா “… ஒரு சாதாரண கிரைம் திரில்லராய் ஆரம்பித்து… மனித உணர்ச்சிகளின் ஆவேசத்தையும் தடுமாற்றங்களையும்
உளவியல் பூர்வமாய் அணுகி… இறுதியில் அருவருப்பையும்… அதிர்ச்சியையும் ஒரு சேர நம் மனசுக்குள் புகுத்தி நம்மை வெகுவாய் தொந்தரவு செய்யும் ஓர் படைப்பு.

கொரிய படங்களில் மிக முக்கியமான ஓர் சினிமாவின் இன்ஸ்பிரேஷன்தான் இந்த படம். ஆனாலும் அந்த கலாச்சார அதிர்ச்சியே நேரடியாக பளார் என முகத்தில் அறையாமல்.. சுற்றி வந்து மண்டை மேல் “நங்” என ஒரு கொட்டு கொட்டியிருக்கிறார்கள்.

ஜோஜு ஜார்ஜ்… இந்த ஆள் நடிக்கிறாரா இல்லை இவர் இயல்பே இப்படித்தானா என்னுமளவிற்கு பிரமோத், வினோத் என்னும் இரு கேரக்டர்களிலும் பந்தமாய் பொருந்தி போகிறார். குற்றவுணர்வின் நிழல் தன் மேல் படரும் வேளையில் வெளிப்படும் முக பாவங்களும் உடல் மொழியும் ஒண்ணாங் கிளாஸாக்கும் .

முதல் மேட்ச் என்னும் பயமின்றி களத்தில் இறங்கியவுடன் செஞ்சுரி போட்டிருக்கிறார் இதன் இயக்குனர் ரோஹித் M.G கிருஷ்ணன். பலனாய், அடுத்த ஆட்டமே பாலிவுட்டில் என்பது இப்படம் இவருக்கு கொடுத்திருக்கும் Conduct சர்டிபிகேட்.

ஒரு மரணம்… அதற்கான காரண கர்த்தாக்களை தேடும் விசாரணை.. அதன் முடிவில் வெளிப்படும் பேரதிர்ச்சி…. அதன் தொடர்ச்சியாய்… மீதமிருக்கும் வாழ்க்கை, மரணத்தை விட கொடுமை மிகுந்ததாய் உறுமாறும் அவலம் என அந்த இறுதி கதாபாத்திரத்தின் வலியே படம் பார்க்கும் நம்மையும் உணர வைப்பதே இப்படத்தின் வெற்றி.

ரா.பூபாலன்‌.

Iratta Malayalam MovieTrailer: Best Malayalam movie in 2023

Iratta Malayalam Movie Review in Tamil
Iratta Malayalam Movie Review in Tamil
  • Director
  • Music
  • Cinematography
  • Actors performance
  • Story
4.1

Iratta Malayalam Movie Review

In the story, Pramod and Vinod are twin cop brothers (Iratta in Malayalam), as well as their friends and relatives.

About the author

Avatar of Bhoopalan Shanthosh

Bhoopalan Shanthosh

As a director/actor in Tamil film, Bhoopalan Raman gained experience in the industry.

The motto he lives by is "Hard work leads to success."

Add Comment

Click here to post a comment